ஐதராபாத்: தொழிலதிபர் மகளுடன் நடிகர் பிரபாஸ் திருமணம் என்ற தகவல் வைரலான போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் நடிக்கும் காலத்தில் இருந்தே அவரது திருமணம் பற்றிய பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் நடிகை அனுஷ்கா உடன் காதலில் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் அந்த நேரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என பிரபாஸ் விளக்கம் கொடுத்தார்.
அதன் பிறகு பிரபாஸுக்கு பெண் பார்க்கும் பணிகளை அவரது குடும்பத்தினர் தீவிரமாக செய்வதாகவும் செய்திகள் வந்தது. இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் உடன் பிரபாஸ் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது என சமீபத்தில் செய்தி பரவியது.
ஆனால் அதில் துளி கூட உண்மை இல்லை என பிரபாஸ் தரப்பு தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறது.