நடிகர் பிரசாந்த் 90களின் அனைவரின் மனம் கவர்ந்த ஹீரோ, சாக்லேட் பாயாகவும் வலம் வந்தவர். இவர் கொடுக்காத ஹிட் படமே இல்லை, இவரது படங்களில் இடம் பெற்ற பல பாடல்கள் இன்னும் ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்களில் இடம் பெற்றுள்ளது.
தற்போது நடிகர் பிரசாந்த் விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அந்தகன் படத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், பிரஷாந்த் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பிரசாந்தின் திரையுலகப் பயணம், திருமண வாழ்க்கை என அனைத்தும் ரசிகர்களுக்குத் தெரியும்.
அந்தகன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் பிரசாந்திடம் மறுமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், திருமணம் நடக்கும், தயார் என்றார். அதன்பிறகு, பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, பெண் பெண்ணாக இருக்க வேண்டும் என்று பதிலளித்தார்.