சென்னை : நடிகர் சந்தானம் அடுத்து டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் செல்வராகவன், கௌதம் மேனன், ரெடின், யாஷிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை ஆர்யா தான் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் பற்றிய அறிவிப்பு தற்போது வெளிவந்து இருக்கிறது.
இந்த பாடலுக்கான வரிகளை ஆர்யா தான் எழுதி இருக்கிறாராம். “கோவிந்தா.. இனி Go-Win-Dha” என கூறி அதற்கான அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டு இருக்கின்றனர்.
சந்தானம் கோவிலுக்கு சென்றிருக்கும் நிலையில், ஆர்யா பாட்டு எழுத செய்திருக்கும் அட்ராசிட்டி வீடியோவாக வெளியாகி உள்ளது.