சென்னை : டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து
மீண்டும் இலங்கைத் தமிழர் கதைக்களத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கிறார்.
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃபிரீடம்’. இலங்கைத் தமிழர் தொடர்பான இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரும் ஜூலை 10-ம் தேதி இப்படம் வெளியாகிறது. இறுதியாக, சசிகுமாரின் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் இலங்கைத் தமிழரின் கதையாக இருந்தது. எனவே, சசிகுமார் 2.0 இப்படத்திலும் ஜெயிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் எழுந்துள்ளது.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உலக அளவில் வசூல் பேட்டை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சசிகுமாரின் நடிப்பு இந்த படத்தில் அனைவராலும் பேசப்பட்டது.