சென்னை : நடிகர் ஷாம் நடித்துள்ள அஸ்திரம் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாம். தமிழ் சினிமாவில் கடந்த 2001 இல் வெளியான ’12பி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவியின் தில்லாலங்கடி, விஜய்யின் வாரிசு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். இவர் தற்போது அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘அஸ்திரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் நீரா மற்றும் வெண்பா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமை 5ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்தப் படம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் மார்ச் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் சில சூழ்நிலை காரணங்களால் இன்று திரைப்படம் வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அஸ்திரம் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.