சென்னை: பிரபல நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் எலும்புக்கூடு போல் காட்சியளிக்கும் ஸ்டில்கள் வைரலாக பரவி வருவதால், அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை சினிமா கலைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.
ஸ்ரீ கடைசியாக இறுக்கப்பற்று படத்தில் நடித்தார். இதற்காக அவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இறுக்கப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு மீது நெட்டிசன்கள் தாக்கி கருத்து தெரிவித்ததை அடுத்து இந்த சர்ச்சைக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.

“நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து எங்களுக்கும் கவலையாக உள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமல்ல, நாங்களும் அவரை கண்டுபிடிக்க நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறோம். இது குறித்து பல யூகங்கள் பரவுவது துரதிர்ஷ்டவசமானது. முதலில் ஸ்ரீயை கண்டுபிடித்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். அதற்கு யாராவது உதவினால் நன்றாக இருக்கும்.”