சென்னை: 43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் ஒரு தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்து கொண்டிருப்பவர் நடிகர் சிலம்பரசன் டிஆர். இயக்குநர், நடிகர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சிம்பு.
தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிம்புவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் அரசன் படத்தின் அப்டேட்டிற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது தகவல் வெளிவரும். அந்த வகையில், நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.