சென்னை: தனது குழந்தைகளுடன் நடிகர் சிவகார்த்திகேயன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது குழந்தைகளுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.