சென்னை: ‘சூர்யா 46’ படப்பிடிப்பில் சக நடிகரின் குழந்தைக்கு தங்க செயின் அணிவித்துள்ளார் நடிகர் சூர்யா. இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ‘கங்குவா’ அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான ‘ரெட்ரோ’ படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.
இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான ‘கருப்பு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ‘சூர்யா 46’ படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கும் சக நடிகரின் குழந்தைக்கு சூர்யா தங்க செயின் போட்டுவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.