சென்னை: ‘மௌனம் பேசியதே’ படம் காதலர் தினத்தை ஒட்டி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தில் உள்ள பிரபல வசனத்தை பேசி நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘நாயகன்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, ‘அஞ்சான்’, தனுஷின் ‘யாரடி நீ மோகினி’, சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘மௌனம் பேசியதே’ படம் மீண்டும் வெளியாக உள்ளது.
காதலர் தினத்தை ஒட்டி வரும் பிப்ரவரி 13 அன்று மௌனம் பேசியதே படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மௌனம் பேசியதே படம் மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மௌனம் பேசியதே படத்தின் பிரபல வசனத்தை சூர்யா பேசியுள்ளார்.