உத்திர பிரதேசம் : உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தாயுடன் புனித நீராடியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் கடைசியாக ‘பேமிலி ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘விடி12’ எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார்.
இப்படம் மார்ச் மாதம் ம் 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வில் பல நடிகை நடிகர்களும் புனித நீராடி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தாயுடன் புனித நீராடியுள்ளார்.