சென்னை: சூர்யா 46 படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டோ கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 46’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.