சென்னை : கலக்குறீங்க ப்ரோ’… என்று பிரதீப்பை நடிகர் விஜய் பாராட்டி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் வேகமாக வளர்ந்து வருகிறார். அவர் நடித்த லவ் டுடே, டிராகன் என 2 படங்களும் ஹிட் அடித்த நிலையில், கலக்குறீங்க ப்ரோ என நடிகர் விஜய் தன்னை பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யுடன் இருக்கும் படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், உங்கள் அனைவருக்கும் தனது உணர்வு புரிந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.