சென்னை : நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடலநலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இன்று அன்னாரது இறுதி ஊர்வலம் நடக்கிறது. சினிமா துறை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் செந்தில், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று கவுண்டமணிக்கு ஆறுதல் கூறி இருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் கவுண்டமணி வீட்டுக்கு நேரில் உடனே கிளம்பி சென்று இருக்கிறார்.
கவுண்டமணி மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறி உள்ளார்.