நடிகர் விமல் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து வருபவர். 2009ம் ஆண்டு வெளியான “பசங்க” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு பெற்றார்.

“களவாணி”, “தூங்கா நகரம்”, “வாகை சூடவா”, “கலகலப்பு”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “தேசிங்கு ராஜா” மற்றும் “மாப்ள சிங்கம்” போன்ற படங்களில் காமெடியில் வெற்றி பெற்றார்.
அதன் பிறகு சில வருடங்களாக அவரின் படங்கள் சராசரியாக வந்தாலும், 2009 இல் அடைந்த வரவேற்பு குறைந்து போனது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான “போகும் இடம் வெகு தூரம் இல்லை” மற்றும் “விலங்கு” வெப் சீரியஸ் மூலம் விமல் மீண்டும் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கும் பல்வேறு புதிய படங்கள் அவருக்குப் பலவிதமான வாய்ப்புகளை வழங்கிவருகின்றன.
கடைசியாக, குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு வந்த விமல், பெருவுடையாரின் தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் அவருடன் “களவாணி 2” படத்தில் நடித்த நடிகர் சுதாகரும் உடனிருந்தார்.