சென்னை: மீண்டும் சூப்பர்ஹிட் இயக்குனருடன் நடிகர் விஷால் கூட்டணி அமைக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இதன்பின் வெளியான ரத்னம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அடுத்ததாக விஷால் கைவசம் உள்ள திரைப்படம் துப்பறிவாளன் 2 தான். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பும் எப்போதும் துவங்கும் என உறுதியாக தகவல் வெளிவரவில்லை.
விஷாலின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று இரும்பு திரை. இப்படத்தை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்க இப்படத்தில் விஷாலுடன் இணைந்து அர்ஜுன் நடித்திருப்பார். அதுவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.
இந்த நிலையில், இரும்பு திரை 2 உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றி கூட்டணியான விஷால் – மித்ரன் இருவரும் மீண்டும் இணைபோவதாகவும், சர்தார் 2 படத்தை முடித்துவிட்டு, இரும்பு திரை 2 படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.