பெங்களூரு: சமீபத்தில் ஒரு பேட்டியில் யாஷ் தனது மனைவி பற்றி கூறியதாவது:- “ராதிகா போன்ற ஒரு மனைவி கிடைத்ததற்கு நான் பாக்கியசாலி என்று சொல்வேன். அவர் என் சிறந்த தோழர். அவர்தான் என்னுடைய முழு பலம். எப்போதும் என்னை ஆதரிக்கக்கூடிய ஒருவர். என்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர். நாங்கள் இருவரும் ஒன்றாக முன்னேறுகிறோம். முதலில் அவர் எனக்கு நல்ல நண்பர். பிறகு மனைவி.
அவர் மட்டும் படத்தில் நான் எவ்வளவு சம்பளம் வாங்கினேன், அது நல்ல படமா, கெட்ட படமா, என் விருப்பமா என்றெல்லாம் என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. அவர் என்னிடம் ஒரே ஒரு கேள்வி கேட்பார், ‘நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ அதுமட்டுமின்றி, அவர் தன்னுடன் நேரத்தை செலவிடுவதையும், தன் மீது கவனம் செலுத்துவதையும் விரும்புகிறார்.
உண்மையில், இது எனக்கு மிகவும் கடினமான விஷயம்,” என்று அவர் கூறினார்.