மதுரை : மருதமலை கோயிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் தான் அடுத்து நடிக்க உள்ள பணத்திற்கான ஆவணங்களை வைத்து பூஜை செய்தார்.
மருதமலை முருகன் கோயிலில், நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் மேற்கொண்டார். தொழிலதிபர் ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில், மாதவனுடன் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதற்கான படப்பிடிப்பில் பங்கேற்க வந்த அவர், தனது அடுத்த படங்களின் கோப்புகளை சாமி பாதத்தில் வைத்து வணங்கினார். பின்னர் அர்த்தஜாம பூஜையிலும் கலந்துகொண்ட அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் புகைப்படம் பரிசளிக்கப்பட்டது.