மும்பை: ரன்பிர் கபூருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரன்பிர் கபூர் நடிக்கும் பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி கதையம்சத்தில் இப்படம் உருவாகி வருகிறதாம்.
இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது கீர்த்தி நடிக்கும் 2-வது ஹிந்தி படமாகும். முன்னதாக, ‘தெறி’ படத்தின் ரீமேக்கில், வருண் தவான் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இருப்பினும் இந்த படத்தினை கீர்த்தி சுரேஷ் வெகுவாக எதிர்பார்த்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. தெறி படத்தின் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.