தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
ஏ.எல்.விஜய் இயக்கிய இட்டு என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், மாமன்னன், சாமி-2, பைரவா, அன்னதா போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை சம்பாதித்தார்.
தற்போது ரகு தத்தா ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ளார். அதில், “நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஆசை இருப்பதாகவும், அவருக்கு தங்கையாக நடிக்க மாட்டேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அஜித்தை சந்தித்த அனுபவம் குறித்து பேசிய கீர்த்தி, “அண்ணாதா படத்தின் ஷூட்டிங்கின் போது நான் தங்கியிருந்த ஹோட்டலில் நடிகர் அஜித் இருந்தார், அங்கு அவரை சந்தித்து பேசினேன் ,என்றார் .