சென்னை: அய்யனார் துணை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை மதுமிதா கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. என்ன விசேஷம் தெரியுமா?
விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மதுமிதா. சன் டிவி எதிர்நீச்சல் புகழ் நடிகை தற்போது விஜய் டிவிக்கு வந்திருக்கும் நிலையில் அய்யனார் துணை சீரியலில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
மதுமிதாவின் பிறந்தநாள் விரைவில் வர இருக்கும் நிலையில் அதை கேக் வெட்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கின்றனர். அவர் கேக் வெட்டி செட்டில் எல்லோருக்கும் ஊட்டி விட்டிருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.