சென்னை : தமிழ் சினிமாவில் நடிகை மமிதா பைஜுவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து முக்கிய நடிகர்களின் படங்களில் புக் ஆகியுள்ளார்.
‘பிரேமலு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மமிதா தற்போது தமிழில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். விஜய் தொடங்கி தனுஷ் வரை முக்கிய ஹீரோக்களின் படத்தில் ஃபர்ஸ்ட் புக் செய்யப்படும் நடிகை மமிதா தான்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’, சூர்யாவின் 46-வது படம், பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’, விஷ்ணு விஷாலின் ‘இரண்டாம் வானம்’, தனுஷின் புதிய படம் உள்ளிட்ட 5 முக்கிய நடிகர்களின் படங்களில் மமிதா நடிக்கிறார்.
இப்படி தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இடத்தில் மமிதா இடம் பிடித்துள்ளது மற்ற நடிகைகள் வயிற்றில் புலியை கரைத்துள்ளது என கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர்.