மாடல் அழகியும் நடிகையுமான மீனாட்சி சௌத்ரி, 1997 மார்ச் 5 ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். மறைந்த கர்னல் பி.ஆர். சௌத்ரியின் மகளான இவர், பல் மருத்துவராகவும், மாநில அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையாகவும் திகழ்ந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா மற்றும் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் போட்டிகளில் முதல் ரன்னர்-அப் பட்டம் வென்றார். அதன் பிறகு, 2019 இல் இந்தி வலைத் தொடர் அவுட் ஆஃப் லவ் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் இச்சட்டா வாகனம் நிலுபராது, கிலாடி, ஹிட்: தி செகண்ட் கேஸ் போன்ற படங்களில் நடித்தார்.

தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்திலும், ஆர்.ஜே. பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்தார். அதன்பின் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில், விஜயின் மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அப்படத்தில் மிகக் குறைந்த காட்சிகளிலேயே தோன்றினார்.
இவர் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் துல்கர் சல்மானுடன் இணைந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து வெளியான சங்கராந்திகி வாஸ்துனம் படமும் வசூல் சாதனை படைத்ததால், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக உயர்ந்தார். இதற்கிடையில் தனது பெயரை Meenakshi இருந்து Meenaakshi என மாற்றிக் கொண்டார்.
திருமண வதந்தி
சமீபத்தில், இவர் நாகார்ஜுனாவின் மருமகனான சுஷாந்த் அணுமோலுவுடன் காதலித்து வருகிறார், விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்திகள் இணையத்தில் பரவின. இதற்கு பதிலளித்த மீனாட்சி சௌத்ரி,
“சுஷாந்துடன் எந்தவித நிச்சயதார்த்தமும் நடைபெறவில்லை, நாங்கள் காதலிக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் எனக்குத் திருமண வதந்திகள் பரவுகின்றன. நான் சமூக வலைத்தளங்களில் பகிரும் தகவல்களே உண்மை”
என்று தெரிவித்தார்.