விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘தி கோட்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கிலும் நடித்து வருகிறார். வெங்கடேஷுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், ‘தி கோட்’ படம் வெளியான பிறகு மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறினார். “அந்தப் படம் வெளியான பிறகு, நான் சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டேன். இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது.
நான் ஒரு வாரம் பாதிக்கப்பட்டேன். ஆனால் நான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் எனது நடிப்பு பாராட்டப்பட்டது. இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று அப்போதுதான் முடிவு செய்தேன்,” என்றார்.