தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு இயக்குனர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் மீது சமூக வலைதளங்களில் பெயர் குறிப்பிடாமல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, “ஒரு பிரபல இயக்குனரால் ஒரு பஞ்சாபி நடிகையின் கேரியர் பாழானது” என்று கூறியிருந்தார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது அவர் தனது பதிவில், “திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் நீண்ட நாட்களுக்கு முன்பு தெலுங்கு திரைப்பட தொழில் சங்கத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் எந்த விசாரணையும் அல்லது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
என் வாழ்க்கையை கெடுத்து, என் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் கெடுத்த அவருக்கு திரையுலகின் முன்னணி பிரமுகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்” என்றார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் சங்கத்தின் பொருளாளர் சிவபாலாஜி கூறுகையில், ”சங்கத்திற்கு தன்னிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. இதுபோன்ற விஷயங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் எந்தப் பயனும் இல்லை” என்றார்.