சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் நச்சுத்தன்மை குறித்து பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. 2016-ல் இருந்து பாலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். 2016-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜீன் குட்எனஃப் என்பவரை மணந்தார். 2021-ல் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் ப்ரீத்தி.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் பற்றி கூறியதாவது:- தற்போது சமூக வலைதளங்கள் அதிகரித்துவிட்டன. அதேபோல், சமூக வலைதளங்களிலும் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது. இது எனக்கு கவலை அளிக்கிறது.
சமூக வலைதளங்களில் ஒருவரை ட்ரோல் செய்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு நபரும் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் இழிநிலையை வெளிப்படுத்துகிறார்கள். சமூக வலைதளங்களில் பிரதமரை புகழ்ந்தால், உடனடியாக அவரது பக்தன் என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறோம். இது சரியல்ல. மக்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். மக்களின் உண்மை முகத்தைக் காட்டுவதுதான் சரியானது. இவ்வாறு அவர் கூறினார்.