ஐதராபாத்: ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற நடிகை பிரியங்கா மோகன் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதவித்து விட்டார்.
பெரிய நடிகைகளை வைத்து துணி கடை, நகை கடை போன்றவற்றை திறப்பது தான் சமீப காலமாக அதிகம் ட்ரெண்ட். அப்படி கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகளை பார்ப்பதற்கே பெரிய அளவில் ரசிகர் கூட்டம் கூடிவிடும்.
அப்படி நடிகை பிரியங்கா மோகன் ஐதராபாத்தில் ஒரு துணி கடை திறப்பு விழாவுக்கு இன்று சென்று இருக்கிறார். பிரியங்கா மோகன் கடைக்கு உள்ளே செல்ல வந்தபோது அவரை சுற்றி பெரிய அளவில் கூட்டம் கூடி கடும் நெரிசல் ஏற்பட்டுவிட்டது.
அந்த நெரிசலில் சிக்கி பிரியங்கா மோகன் பரிதவித்து ோய்விட்டாராம்.