சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு குறித்த விபரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ₹66 கோடியாக உள்ளதென Forbes அறிக்கை தெரிவிக்கிறது.
புஷ்பா 2வில் நடிக்க ₹10 கோடி பெற்ற அவர், பொதுவாக ஒரு படத்திற்கு ₹4 கோடி சம்பளம் வாங்குகிறாராம் . BOAT, 7UP, Meesho உள்ளிட்ட பிராண்டுகளின் விளம்பரங்கள் மூலமும் அவருக்கு வருமானம் குவிக்கிறது.
பெங்களூருவில் ₹8 கோடி மதிப்பில் பங்களா உள்பட நாடு முழுவதும் 4 இடங்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளார், ஆடி கார், ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட 4 சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.
இத்தகவல் இணையத்தில் வெகுவேகமாக வைரலாகி வருகிறது. இவருக்கு தற்போது பல படங்கள் புக்கிங் ஆகி வருவதால் சொத்து மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.