நடிகை சுர்வீன் சாவ்லா தமிழ், ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். “மூன்று பேர் மூன்று காதல்”, “புதிய திருப்பங்கள்”, “ஜெய் ஹிந்த் 2” போன்ற தமிழ்படங்களில் நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு அக்ஷய் தக்கரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஓய்ந்தார். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ் திரையுலகில் நிகழ்ந்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், ஒரு தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர், ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் நடிக்கும் படத்துக்காக தன்னை ஸ்க்ரீன் டெஸ்ட் செய்ததாக அவர் தெரிவித்தார். 12 மணி நேரம் நீண்ட அந்த டெஸ்டில், தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்து பல தடவை நடித்துத் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உடை மாற்றங்கள், தோற்றத்தில் மாற்றங்கள், ரீடேக்குகள் என பலவிதமான வேலைகள் இருந்தன.
மும்பைக்கு திரும்பிய பிறகு அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அந்த இயக்குனரின் நண்பர் ஒருவர் அழைத்ததாகவும், அவர் நேரடியாக விஷயத்தை சொல்லாமல் சுற்றித்திரித்து பேசியதாகவும் கூறினார். அந்த நண்பர், இயக்குனர் அவருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாக கூறியதாகவும், “இயக்குனர் என்னுடன் படுக்க விரும்புகிறாரா?” என்று நேரடியாக கேட்டதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
சுர்வீன், இது ஒரு முறையல்ல, இரு முறையல்ல, இருபது முறை நடந்த அனுபவம் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் பெயரை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இந்த சம்பவம், அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கும் தெரியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இவ்வாறு ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருப்பது தமிழ் சினிமாவிற்கு பெரிய அவமானமாகும்.
இந்த பேட்டி யூடியூபில் நேற்று வெளியானது.