சென்னை: புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக ரூ. 6.2 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா சமீபகாலமாக நடிப்பை தாண்டி சிறப்பு பாடலில் நடனமாடுவதில் ஆர்வமாக இருக்கிறார்.
இவர் நடனமாடும் பாடல்களும் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகிவிடுகிறது. இதற்காக இவர் ரூ. 1 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. அதே போல் சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் நடனமாடுவதற்கு கூட இவர் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கினார் என்கின்றனர்.
இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நடிகை தமன்னா, தற்போது புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தமன்னா, ரூ. 6.2 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
சினிமா சம்பளத்தைவிட அதிக வருமானம் தரும் இந்த டீல் தற்போது கோலிவுட் மற்றும் விளம்பர உலகில் பேசுபொருளாகியுள்ளது.