விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரின் மூலம் டீனேஜ் வயதிலேயே சீரியல் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சீரியல்களில் ஹோம்லியாக நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் பதிவிட்டு ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த புகழின் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தேர்வான ஷிவானி, பல நாட்கள் வீட்டிற்குள் இருந்து வந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோயினாக நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தாலும், அந்த நம்பிக்கைகள் பெரிதாக பலித்ததாக தெரியவில்லை.
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ உள்ளிட்ட சில படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். ‘பம்பர்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தாலும், அந்த படம் மிகுந்த வரவேற்பு பெறவில்லை. இருந்தாலும் நம்பிக்கையை இழக்காத ஷிவானி, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட மாடர்ன் உடை அணிந்த புகைப்படங்கள் வைரலாகி, ரசிகர்களிடம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. தற்போது அவர் புதிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.