ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதன் ‘சக்சஸ் மீட்’ சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், “ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், நடிகரால் ஈர்க்கப்பட்டு, இயக்குநராக ஆசைப்பட்டு இன்று இங்கு நிற்கிறான்.

நான் அஜித்தின் ரசிகனாக இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை. அஜித் சாருக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் சந்தித்தபோது பெரிய வெற்றி பெறாமல் இயக்குனராக இருந்தேன். ஆனால், என் முதல் படம் வெற்றி பெற்றதில்லை அவர் என்னை ஒரு சக மனிதனாக பார்க்கிறார். அஜித் சார் தன்னை பெரிய நட்சத்திரமாக நினைத்துக் கொண்டதில்லை.
அவர் தன்னை ஒரு நடிகனாக மட்டுமே நினைக்கிறார். அவர்தான் இந்தப் படத்துக்கு தலைப்பை முடிவு செய்தார்,” என்றார். தயாரிப்பாளர் நவீன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், அர்ஜுன் தாஸ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.