சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருடன்’. லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல், விமர்சனம், ரீமேக் உரிமை என அனைத்தும் கொண்டாடப்பட்டது. தற்போது ‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு எந்த அறிவிப்பும் இல்லாமல் தொடங்கியுள்ளது.
படத்திற்கு ‘பைரவம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் மற்றும் பலர் நடித்துள்ளனர். எந்த கேரக்டரில் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதில் ஆனந்தி, அதிதி சங்கர், திவ்யா பிள்ளை ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘நந்தி’ படத்தை இயக்கிய விஜய் கனகமெடலா ‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வெண்ணிலாவாக அதிதி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார். போஸ்டரைப் பொறுத்தவரை, இரு சக்கர வாகனத்தில் பால் கேனை சுமந்து செல்லும் தலையில் பூவுடன் அசல் கிராமத்து பெண் போல காட்சியளிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.