தெலுங்கானா மாநில அரசால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு செயலிகளை விளம்பரப்படுத்திய விவகாரத்தில் பணமோசடி செய்யப்படலாம் என்ற வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக, அந்த விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், லட்சுமி மன்ஷு, நிதி அகர்வால் உள்ளிட்ட 29 திரைப்பட பிரபலங்கள் மீது அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது.

அவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருந்தது. பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா ஆகியோர் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகி விளக்கங்களை அளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, நடிகை லட்சுமி மன்ஷு நேற்று அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் ஆஜராகி விளக்கங்களை அளித்தனர். அதிகாரிகள் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.