சமூக வலைதளங்களில் எழுந்துள்ள கருத்துகளை அடுத்து ‘வேட்டையன்’ படத்தில் சில மாற்றங்களை செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ‘வேட்டையன்‘ படத்தின் டீசர் வெளியானது. அமிதாப் பச்சன் கேரக்டருக்கு பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இது தொடர்பாக இணையத்தில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
அமிதாப் பச்சனின் பின்னணிக் குரல் நன்றாக இல்லை என்று பலர் கூறினர். அமிதாப் பச்சனின் குரலை அனைத்து மொழிகளிலும் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது. AI தொழில்நுட்பத்தின் மூலம் இதை சாத்தியமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் முடிவடையும் எனத் தெரிகிறது. டி.எஸ்.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்ஷன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் ‘வேட்டையன்’ அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.