
சினிமாவில் AI தொடர்பான காட்சிகளை உருவாக்க வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை தற்போது பெரும்பாலான தயாரிப்பாளர்களை எதிர்கொள்ள வைக்கும் நிலையில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்தியாவில் AI ஸ்டுடியோ ஒன்றை தொடங்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மே 4ஆம் தேதி இந்த ஸ்டூடியோ திறக்கப்பட உள்ளதுடன், இதில் நடைபெறும் பணிகள் மற்றும் அம்சங்களை விரைவில் முழுமையாக அறிவிப்பதாக ஒரு ப்ரோமோ வீடியோவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்த “கோட்” போன்ற படங்களில் டிஏஜிங் போன்ற AI காட்சிகளை உருவாக்க அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்வது மட்டுமே வழக்கமாக இருந்தது. “கோட்” படத்திற்கும் விஜய் அமெரிக்கா சென்று டிஏஜிங் காட்சிகளை உருவாக்கியதை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில், வாரிசு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த தில் ராஜு, AI தொழில்நுட்பத்தை கொண்டு இந்திய சினிமாவை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக இந்தியாவில் AI ஸ்டுடியோ தொடங்கியுள்ளார். இதன்மூலம் இனிமேல் இந்திய திரைத்துறைக்கும் தொழில்நுட்ப அடிப்படையிலான காட்சிகளை வெளிநாட்டில் போயே உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் மாற வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் AI காட்சிகளை உருவாக்கும் பணியில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.