பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த விழாவில் இந்திய ரசிகர்களின் பார்வை வழக்கம்போல பாலிவுட் நட்சத்திரமான ஐஸ்வர்யா ராய் பச்சன் மீது உள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வரும் ஐஸ்வர்யா, இந்த வருடம் தனது மகள் ஆராத்யாவுடன் விழாவுக்கு சென்றுள்ளார்.

அனைவரும் எதிர்பார்த்ததைவிட வித்தியாசமாக, இந்த முறை வெள்ளை நிற சேலையுடன் சிவப்புக் கம்பளத்தில் தேவதை போல் காட்சியளித்தார். ஆனால் ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தியது அவரது தலையில் காணப்பட்ட சிந்தூரின் மீது தான். அவருடைய தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு தரப்பினர், கணவர் அபிஷேக் பச்சனுடன் தனக்கு பிரச்சனை இல்லை என்பதை உலகத்திற்கு தெரிவிக்கவே சிந்தூர் வைத்திருக்கிறார் என்கிறார்கள். கடந்த சில மாதங்களாக அவர்களது திருமண வாழ்க்கை குறித்த வதந்திகள் பரவிய நிலையில், இது நேரடியாக மறுப்பு அளிக்கும் சின்னமாக பார்க்கப்படுகிறது.
மற்றொரு தரப்பினர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை “ஆபரேஷன் சிந்தூர்” என அறிவித்ததை ஆதரிக்கவே, ஐஸ்வர்யா ராய் சிந்தூர் வைத்திருக்கிறார் என கூறுகின்றனர். இவ்வாறு அவர் ஒரு தேசிய உணர்வை வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர்களின் கருத்து.
இந்த விடயம் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. சிலர் அவரை பாராட்டியிருக்க, சிலர் இது தேவையற்ற விளக்கம் என விமர்சித்து வருகின்றனர். முன்னதாக ஹோட்டல் லாபியில் ரசிகர்களுக்கு கையசைத்து பறக்கும் முத்தம் கொடுத்த வீடியோவும் வைரலானது. ஐஸ்வர்யா ராயின் இந்த தோற்றம் மற்றும் நடைபோக்கு, ரசிகர்களிடையே தொடர்ந்து பேசப்படும் விசயமாகியுள்ளது.