ஒரு படத்தின் வெற்றியால் பல இயக்குனர்கள் ஐஸ்வர்யா ராஜேஷிடம் கதை சொல்கிறார்கள். தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான படம் ‘சங்கிராந்திக்கி வஸ்துணாம்’. வெங்கடேஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் வெற்றியால் பல்வேறு முன்னணி இயக்குனர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்து கதைத்து வருகின்றனர். கதாநாயகி மட்டுமல்லாது, ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த முடிவு அவருக்கு பலத்த பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சம்பளத்தை உயர்த்தி விரைவில் தனது அடுத்த படத்தை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த வெற்றியை தக்கவைக்க சரியான கதைகளை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார்.