சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் இயக்குனர்கள் சிறுத்தை சிவா, எச்.வினோத் ஆகியோருடன் அஜித் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜீத் இணையும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் திரையுலக வட்டாரங்கள்.