சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்த படம் விடாமுயற்சி. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் சவதிகா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அஜித் குறித்து நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் கூறிய தகவல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. 2023 பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. அதையடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டான அஜித் கடந்த இரண்டு வருடங்களாக நடித்து வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆனால், படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சினிமா வட்டாரத்தில் தகவல் வேகமாக பரவி வருகிறது இப்படத்தின் டிரைலரை புத்தாண்டு தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், விடாமுயற்சி டிரைலர் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. டிரெய்லர் ரிலீஸ் தேதி ஜனவரி 1 என்று ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில், ட்ரைலர் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
இந்த புத்தாண்டை அஜீத் ரசிகர்கள் அலரவிடும் அளவுக்கு என கொண்டாடி வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அஜித் குறித்து நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் கூறிய தகவல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது சவதிகா பாடல் படப்பிடிப்பின் போது அஜித்துக்கு 102 டிகிரி காய்ச்சல். படப்பிடிப்பு தளத்துக்கு வர வேண்டாம், படப்பிடிப்பை தள்ளிப்போடலாம் என்று கூறினேன். மேலும், அவருக்கு இருமல் அதிகமாக இருந்தது. எல்லோரும் அவரை ஓய்வு எடுக்கச் சொன்னார்கள்.
ஆனால் நாங்கள் சொன்னதை அஜித் கேட்கவில்லை. மேலும், 40 நடன கலைஞர்கள் உள்ளனர். “இவ்வளவு டெக்னீஷியன்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால, இன்னும் அரை மணி நேரத்துல வந்துடறேன்னு சொல்லி, மாத்திரை கொடுத்து, பாட்டுக்கு ஆட வைத்தேன்” என்றார் கல்யாண் மாஸ்டர். அஜித் பற்றி கல்யாண் மாஸ்டர் கூறிய இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.