சென்னை: ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் கார் பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக 3-வது இடத்தைப் பிடித்ததன் மூலம் அஜித் அணி சாதனை படைத்துள்ளது. இதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது சமூக ஊடகப் பதிவில் கூறியதாவது:- பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி ஒட்டுமொத்தமாக 3வது இடத்தைப் பிடித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சாதனையின் மூலம் உலக அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்தியதற்காக நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

மேலும், இந்த சர்வதேச போட்டியின் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை கார், பந்தய உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக அவருக்கும் அவரது குழுவினருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது அணி இன்னும் பல கோப்பைகளை வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.