துபாய்: துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜித்குமார் காயமின்றி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறும் ’24எச் மற்றும் ஐரோப்பிய 24எச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ்’ போட்டிகளில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார்.
இந்நிலையில் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டி வந்த ரேஸ் கார், அருகில் இருந்த தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. ஆனால், அஜீத் காரில் இருந்து காயம் ஏதுமின்றி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.