தமிழ் சினிமாவில் 1993-ஆம் ஆண்டு ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித் குமார், இன்று 33 வருடங்கள் நிறைவு செய்கிறார். இந்த நீண்ட பயணத்தில் காதல் கதாபாத்திரங்களிலிருந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறிய அவரது வளர்ச்சி ரசிகர்களுக்கு தெரிந்தது. ‘ஆசை’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘தீனா’, ‘வில்லன்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என பல படங்கள் மூலம் வெவ்வேறு பாணிகளில் திறமை வெளிப்படுத்தியவர்.

திறமை மட்டுமல்லாமல், மோட்டார் ரேசிங்கிலும் அஜித் தன் பங்களிப்பை வெளிப்படுத்தி, சமீபத்தில் ப்ரோ ஏ.எம். பிரிவில் முதலிடம் பிடித்தார். தன்னம்பிக்கையும் ஒழுக்கமும் அவரின் வாழ்கையின் அடையாளமாக இருக்கின்றன. இந்த பயணத்தை சுலபமாக ஏற்க முடியாது என்று கூறும் அவர், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் மீண்டும் மீண்டும் தன்னை முன்னேற்றுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ரசிகர்களின் உண்மையான அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என்றும் உறுதி அளித்தார். சினிமா, ரேசிங் என இரு துறைகளிலும் உச்சத்தை நோக்கி பயணிக்கும் அஜித், இப்போது தனது சாதனைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். குடும்பத்தினரின் ஆதரமும், தந்தை, தாயின் தியாகமும், மனைவியின் உறுதியும், குழந்தைகளின் அர்த்தமுள்ள பங்களிப்பும் அவருக்கு தூண்டுதலாக இருக்கின்றன.
அஜித் கூறுவது போல, ஒவ்வொரு தடையும் வாழ்வின் ஒரு பாடமாகவே அவரை உருப்படுத்தியுள்ளது. பத்மபூஷண் விருது பெற்றவர் என்ற அடையாளத்தைக் காட்டிலும், ஒவ்வொரு ரசிகரின் நம்பிக்கையையும் அவரின் வெற்றியாகவே எடுத்துக்கொள்கிறார்.
அவரது அறிக்கையில், “வாழு வாழ விடு” என கூறிய இறுதிக் வரிகள், வெறும் வாசகமாக அல்ல, அவர் வாழும் உன்னத நோக்கத்தின் சுருக்கமாக திகழ்கின்றன.