சென்னை : பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது. அஜித், ஷாலினி, மகன் மற்றும் மகள் மட்டுமின்றி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார்.
நடிகர் அஜித் கேரியரில் புது சாதனையாக அவர் பத்மபூஷன் விருது வாங்கி இருப்பது பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.
டெல்லியில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
விருது விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது. அஜித், ஷாலினி, மகன் மற்றும் மகள் மட்டுமின்றி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார்.