சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, ராகுல் தேவ், சுனில், ஷைன் டாம் ஷாக்கோ, யோகி பாபு, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘காட் பிளஸ் யூ’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இதை எழுதியவர் ரோகேஷ். ‘ராப்’ பகுதியை பால்டப்பா பாடியுள்ளார். இதற்கு முன்பு ‘வேதாளம்’ படத்துக்காக அனிருத் பாடிய ‘ஆளுமா டோலுமா’ பாடல் ஹிட்டானது.
அதேபோல் இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சக இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இந்த பாடல் சூப்பர்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.