மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ‘குட் பேட் அக்லி’ திரையரங்குகளில் அதிக வசூல் செய்து வருகிறது.
‘மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் இந்தப் படம், அஜித் ரசிகர்களுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தியதோடு, அவருடைய பல படங்களின் குறிப்புகளையும் உள்ளடக்கியது. ‘குட் பேட் அக்லி’ படம் அஜித்தின் ராஜ்ஜியத்தைப் பற்றியது. மிகுந்த உற்சாகத்துடன் இருக்கும் அஜீத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் பார்ப்பது த்ரில்லான அனுபவம் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் 2025-ல் இதுவரை வெளியான தமிழ் படங்களில் ‘பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம்’ என்ற சாதனையை உறுதி செய்துள்ளது. இப்படம் உலகளாவிய வெளியான வசூல் முதல் 4 நாட்களில் ரூ. 148.50 கோடி வசூலித்துள்ளது. இதில் இந்திய வசூல் ரூ. 84 கோடி. நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால் பிஸியான நாளாக இருப்பதால் 5 நாள் வசூல் எளிதாக ரூ. 170 கோடியை எளிதில் எட்டிவிடும்.
முதல் வார வசூலும் விரைவில் ரூ. 200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசூலின் மூலம் 2025-ல் இதுவரை வெளியான தமிழ் படங்களில் ‘பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம்’ என்ற சாதனையை ‘குட் பேட் அக்லி’ பெற்றுள்ளது. இதற்கு முன் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் மொத்தம் ரூ. 136 கோடியை ஈட்டியிருந்தது. மேலும், ‘குட் பேட் அக்லி’ தற்போது பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தையும் முந்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெறும் 5 நாட்களில் 152 கோடி வசூலித்துள்ளது. இதையடுத்து, அதிக வசூல் செய்த அஜித் படங்களின் பட்டியலில் ‘குட் பேட் அக்லி’ முதலிடத்துக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக பட வியாபாரிகள் கணித்துள்ளனர்.