அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வசூலிலும் சிறப்பாக சாதனை படைத்த இந்தப் படம், தற்போது திரையரங்குகளில் மீண்டும் அதிக காட்சிகளைப் பெறும் அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி, ஜி.வி. பிரகாஷின் இசையுடன் திரையில் ஒலித்தது. முக்கிய வேடங்களில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில், அர்ஜுன் தாஸ் வில்லனாக அஜித்துக்கு எதிராக கலக்கினார்.

தொடர்ந்து வெளியான புதிய திரைப்படங்களால் ‘குட் பேட் அக்லி’க்கு இடையூறு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், படம் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுவருவதால், சில திரையரங்குகளில் இதற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு மாதத்துக்குப் பிறகு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க அஜித் ஷோவாக அமைந்த இந்தப் படம், அவரது ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் ஈர்த்திருக்கிறது. விமர்சனங்கள் கலந்துள்ளபோதிலும், ரசிகர்களிடம் படம் உறுதியான இடம் பிடித்திருப்பது வசூல் மற்றும் திரையரங்க மவுசு மூலம் வெளிப்படுகிறது.
படக்குழு விரைவில் இதன் வசூல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ தற்போது அஜித் திரைப்படங்களில் அதிக வசூல் கண்ட படமாக வலம் வருகின்றது.
படக்குழு விரைவில் இதன் வசூல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ தற்போது அஜித் திரைப்படங்களில் அதிக வசூல் கண்ட படமாக வலம் வருகின்றது.