சென்னை: ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த தனது மகன் குறித்த வீடியோவை ஷாலினி அஜித்குமார் பகிர்ந்துள்ளார். இது செம வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே கலைத்துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
சினிமா, ரெசிங் என அஜித் பிசியாக இருக்கும் இந்நேரத்தில் அவரின் மகன் ஆத்விக் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஓட்டப்பந்தயத்தில் ஆத்விக் பங்கேற்று வெற்றி பெற்ற வீடியோவை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.