பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்த ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் மூன்றாம் பகுதி செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், வால்மீகி முனிவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவதாகவும், அக்ஷய் குமார் வால்மீகியாக நடிக்கப் போவதாகவும் கூறும் வீடியோ வெளியிடப்பட்டது.
அதில், வால்மீகி வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் காட்சிகள் காட்டப்பட்டன. இதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த பதிவில், “நான் வால்மீகி வேடத்தில் நடிக்கும் வீடியோக்களை செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி உருவாக்கியதை நான் பார்த்திருக்கிறேன். அவை போலியானவை.

இதை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். சில சேனல்கள் அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை சரிபார்க்காமல் செய்தியாக வெளியிடுவது மோசமானது.
செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான உள்ளடக்கம் உருவாக்கப்படும் இந்தக் காலத்தில், ஊடக நிறுவனங்கள் அதைச் சரிபார்த்த பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும்.”