ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா-2 படத்தின் சிறப்பு காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் நேற்று மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 4-ம் தேதி மாலை திரையிடப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். இதனால் அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ரசிகர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகருமான ஸ்ரீ தேஜ் என்ற 9 வயது சிறுவனும் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்தான். போலீசார் ஸ்ரீதேஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி அல்லு அர்ஜுன் வந்ததால் ரேவதி உயிரிழந்ததாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில சட்டசபையில் விளக்கமளிக்க வேண்டும். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று ஹைதராபாத்தில் உள்ள சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார். அவருடன் அவரது தந்தையும் திரைப்பட தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் மற்றும் பலர் வந்தனர்.
நேற்று காலை 11.05 மணி முதல் மதியம் 2.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் அல்லு அர்ஜூனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்டனர். நடிகர் அல்லு அர்ஜுனிடம் மத்திய மண்டல இணை ஆணையர் ஆகாஷ் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு முன், அன்று சினிமா ஹாலில் நடந்த அனைத்து சம்பவங்களின் வீடியோவும் அல்லு அர்ஜுனிடம் காட்டப்பட்டது.
அப்போது அல்லு அர்ஜுனிடம், வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த உங்களால் எப்படி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு உங்களுக்கு அனுமதி வழங்கியது யார்? காவல்துறை அனுமதி மறுத்தபோது ஏன் திரையரங்கிற்கு வந்தீர்கள்? கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் வீடியோவை பார்த்து நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணையின் போது கண்ணீர் விட்டார். அப்போது இருட்டில் சினிமா ஹாலில் நடந்தது தெரியாது, தன் மீதும் தவறுகள் இருப்பதாகவும், போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.